சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மரணம்

பிரபல இந்தி மற்றும் மராத்தி மொழி நடிகர் பிரதீப் பட்வர்தன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

தினத்தந்தி

பிரபல இந்தி மற்றும் மராத்தி மொழி நடிகர் பிரதீப் பட்வர்தன். இவர் புல் சார் ஹாப், போலீஸ் லைன், சஷ்மே பஹதர், ஏக் ஷோத், மீ சிவாஜி ராஜே போஸ்லே போல்டோய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மாவுடன் பாம்பே வெல்வெட் இந்தி படத்திலும் நடித்து இருக்கிறார். பிரதீப் பட்வர்தன் மும்பையில் உள்ள கிர்கானில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு பிரதீப் பட்வர்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பிரதீப் பட்வர்தன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.

பிரதீப் பட்வர்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, ''மராத்தி சினிமா ஒரு சிறந்த கலைஞரை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார். இந்தி நடிகர்-நடிகைகளும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மறைந்த பிரதீப் பட்வர்தனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை