பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார். இவர் ஏராளமான மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 1989-ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கிரைம் பிராஞ்ச் படம்தான் காரியவட்டம் சசிகுமார் நடித்த முதல் படம். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்ததால் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. நாகம், மிமிக்ஸ் பரேட், தேவசுரம், காம்பூலம், குஷ்ருத்தி கட்டு, ஆதாயத்தே கண்மணி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். காரியவட்டம் சசிகுமார் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். காரியவட்டம் சசிகுமார் மறைவுக்கு மலையாள நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையு லகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.