சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மரணம்

தினத்தந்தி

பிரபல இந்தி நடிகர் சமீர் காகர். இவர் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நக்கட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து மேலும் பிரபலமானார். சல்மான்கானுடன் ஜெய் ஹோ படத்தில் சமீர் காகர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இந்த நிலையில் சமீர் காகருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது பல உடல் உறுப்புகள் செயல் இழந்து இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சமீர் காகர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. சமீர் காகர் மறைவுக்கு இந்தி நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து