சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் ஆபாச படம்... பிரபல நடிகை போலீசில் புகார்

நடிகை பிரவீனா மற்றும் அவரது மகள் புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மகளுடன் சென்று சைபர் கிரைம் போலீசில் பிரவீனா புகார் அளித்தார்.

தினத்தந்தி

தமிழில் கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று', ஜெயம் ரவியுடன் 'கோமாளி' மற்றும் 'வெற்றிவேல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரவீனா. சில தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கிறார். ஏற்கனவே பிரவீனாவை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசில் புகார் செய்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லியில் ஒருவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இந்த நிலையில் தற்போது பிரவீனா மற்றும் அவரது மகள் புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மகளுடன் சென்று சைபர் கிரைம் போலீசில் பிரவீனா புகார் அளித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது ஏற்கனவே நான் புகார் அளித்ததால் அவர் என்னை பழிவாங்கும் நோக்கோடு எனது புகைப்படம் மற்றும் மகள், அம்மா, சகோதரி ஆகியோரின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வருகிறார். எனது பெயரில் சுமார் 100 போலி கணக்குகள் தொடங்கி ஆபாச படங்களை வெளியிடுகிறார். இப்படி ஒரு வக்கிரபுத்தியோடு யாரும் இருக்க முடியாது'' என்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து