வாஷிங்டன்,
அமெரிக்காவின் பிரபல நடிகையாக இருப்பவர் கிம் கர்தேசியன். இவரது கணவர் கன்யே வெஸ்ட். இந்த தம்பதிக்கு நார்த் வெஸ்ட், செயின்ட் வெஸ்ட், சிகாகோ வெஸ்ட் மற்றும் சாம் வெஸ்ட் என 4 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் இந்த தம்பதி பிரிந்தது. இந்த நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கிம்மின் 5 வயது மகன் செயின்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்பின்னர் நார்த்துக்கும் பரவியுள்ளது. தனக்கும் பாதிப்பு உள்ளது என கிம்முக்கு தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து கிம் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தனக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடுமையான அறிகுறிகளும் ஏற்பட்டன என கூறியுள்ள கிம், அதிலிருந்து குணமடைந்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன், கிம்மின் சகோதரி குளோ கர்தேசியன் மற்றும் கிம்மின் முன்னாள் கணவர் கன்யே வெஸ்டுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.