சினிமா செய்திகள்

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது

பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தி திரையுலகில் பிரபல திரைப்பட பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். கடந்த 2002ம் ஆண்டு தேவ்தாஸ் படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார். பல பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இதுதவிர சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட தமிழ் படங்களில் 150க்கும் மேற்பட்ட இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது கணவர் ஷிலாதித்யா முகோபாத்யாயா. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கர்ப்பம் ஆக இருக்கிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தொடர்ந்து பல புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவேற்றினார்.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மதியம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். அதில், கடவுள் விலைமதிப்பில்லா ஆண் குழந்தையை எங்களுக்கு ஆசீர்வதித்து உள்ளார்.

இதுபோன்ற மகிழ்ச்சி இதற்கு முன் உணர்ந்தேதேயில்லை. எங்களுடைய குடும்பத்துடன், ஷிலாதித்யா மற்றும் நான் முழுமையாக மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறோம். எங்களுடைய இந்த மகிழ்ச்சிக்காக எண்ணற்ற ஆசீர்வாதங்களை அளித்த உங்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்