சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'துர்கா' படத்தை இயக்கும் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள்..!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'துர்கா' திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்க இருக்கிறார்கள்.

தினத்தந்தி

சென்னை,

'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படம் மூலம் சண்டைப்பயிற்சி இயக்குனர்களாக அறிமுகமான இரட்டையர்கள் அன்பறிவ். இவர்கள் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அன்பறிவ் இருவரும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'துர்கா' படத்தை இயக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், 'புகழ்பெற்ற ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் 'துர்கா' திரைப்படத்தை ராகவேந்திரா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்க இருக்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.

'துர்கா' படத்தின் படப்பிடிப்பு  விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பிற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு