சினிமா செய்திகள்

'வாயை மூடிக் கொண்டு போ' - ரசிகரால் கடுப்பான சுருதிஹாசன்

நடிகை சுருதி ஹாசன் தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.

தினத்தந்தி

சென்னை,

சுருதிஹாசன் நடிப்பில் கடந்த வருடம் தெலுங்கில் 4 படங்கள் வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் டெகாய்ட் மற்றும் சலார் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார். சென்னை ஸ்டோரி என்ற படத்திலும் நடிக்கிறார். நடிப்பில் மட்டுமில்லாமல் பாடல்கள் பாடியும் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இவர் தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அவ்வாறு சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும்போது ரசிகர் ஒருவர் தென்னிந்திய மொழியில் ஏதாவது பேசுங்கள் என்று கேட்டார். இதனால் கடுப்பான சுருதிஹாசன், பதில் அளித்து கூறுகையில்,

"இது போன்று பிரித்துப்பார்ப்பதை நான் பொருத்துக்கொள்ள மாட்டேன். எங்களைப் பார்த்து இட்லி, தோசை, வடை சாம்பார் என்று அழைத்தால் நாங்கள் சகித்துக்கொண்டு இருக்க மாட்டோம். அதை காமெடியாகவும் எடுத்துக்கொள்ள மாட்டோம்.

எங்களைப்போல உங்களால் இருக்க முடியாது.எங்களை மாதிரி இருக்க முயற்சியும் செய்யாதீர்கள். தென்னிந்திய மொழியில் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டாய் இல்லையா வாயை மூடிக் கொண்டு போ'' என்று தமிழில் எழுதினார். 

முன்னதாக, தெலுங்கு நடிகர் ராம் சரணை நிகழ்ச்சியொன்றில் ஷாருக் கான், இட்லி, வடை என்று அழைத்து எதிர்ப்புக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து