சினிமா செய்திகள்

நடிகர்களுக்கு ரசிகர்களே பலம் - நடிகை ராஷ்மிகா

நடிகர்களுக்கு ரசிகர்களே பலம் என்று நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.

தினத்தந்தி

கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

நடிகர்களுக்கு ரசிகர்கள்தான் பலம். எவ்வளவு நன்றாக நடித்தாலும் ரசிகர்கள் பலம் இருந்தால்தான் ஆதரவு மேலும் கிடைக்கும். புதிய படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் பேனர் கட்டுவது, கொடி தோரணங்கள் அமைப்பது எல்லாமே ரசிகர்கள்தான். ரசிகர்கள் இல்லாமல் உயர முடியாது என்று நடிகர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஒவ்வொரு நடிகரும் ரசிகர் மன்றம் வைத்து ரசிகர்களை கவரவிக்கிறார்கள். நானும் ரசிகர்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கிறேன்.

என் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல பிரச்சினைகளில் இருந்து ரசிகர்கள் ஆதரவால்தான் மீண்டு இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். ரசிகர்கள்தான் எனது பலம். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரசிகர்களோடு அதிக நேரத்தை கழிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் நிறைய ஆலோசனைகள் கொடுத்தனர். அது எனக்கு உபயோகமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்க தயாராகி வருகிறேன்.

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்