சினிமா செய்திகள்

’ஒவ்வொரு இழப்புக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கு’ - கவனம் ஈர்க்கும் 'ரமணி கல்யாணம்' பட டிரெய்லர்

இப்படம் வரும் 22-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

சூர்யா வசிஷ்டா, தீப்ஷிகா சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரமணி கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

டிரெய்லரின் தொடக்கத்திலேயே வரும், "வாழ்க்கையில எதையாவது இழந்த எல்லாருக்குள்ளும் ஒரு கதை இருக்கும்" என்ற வசனம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. இதனைத் தொடர்ந்து டிரெய்லர் முழுக்க பாசம், நகைச்சுவை, எமோஷன் மற்றும் ஒரு சிறிய மர்மத்தோடு நகர்கிறது.

இந்த படத்தை விஜய் அதிரெட்டி இயக்கியுள்ளார். ‘கைட்ஸ் கிரியேட்டிவ்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கோர்ட்’ புகழ் ராம் ஜெகதீஷ் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

கண்பார்வையற்ற ஒரு பெண் மற்றும் நடக்க முடியாத ஒரு ஆண் ஆகியோருக்கிடையே உருவாகும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது.

தற்போது வெளியாகியுள்ள ‘ரமணி கல்யாணம்’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படம் வரும் 22-ம் தேதி திரைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT