சினிமா செய்திகள்

படம் தோல்வி: நஷ்டஈடு வழங்க சார்மி மறுப்பு?

சார்மி தயாரித்த லைகர் படம் படுதோல்வி அடைந்தது. இதையொட்டி சார்மி வினியோகஸ்தர்களை சந்தித்து பேசவும், நஷ்டஈடு வழங்கவும் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

தமிழில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகையான சார்மி பிரபல தெலுங்கு டைரக்டர் பூரிஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். விஜய்தேவரகொண்டா நடிக்க பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் சார்மி தயாரித்த லைகர் படம் சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. இதனால் அதிர்ச்சியான சார்மி வலைத்தளத்தில் இருந்து விலகினார். தோல்வி காரணமாக விஜய்தேவரகொண்டா தனது சம்பளத்தில் ரூ.6 கோடியை திருப்பி கொடுத்து விட்டார். அவர் ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாகவும், லாபத்திலும் பங்கு வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. லைகர் படத்தை தங்களிடம் அதிக விலைக்கு விற்றுவிட்டதாகவும், எனவே நஷ்டஈடு தரவேண்டும் என்றும் வினியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அனைத்து வினியோகஸ்தர்களும் தங்களுடைய முதலீட்டில் 70 சதவீதத்தை இழந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சார்மி வினியோகஸ்தர்களை சந்தித்து பேசவும், நஷ்டஈடு வழங்கவும் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பிரச்சினையை தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைக்கு கொண்டு செல்ல வினியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு