ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படம், வர்மா என்ற பெயரில் தமிழில் படமாகிறது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை பாலா டைரக்டு செய்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் வர்மா படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.