சினிமா செய்திகள்

அதர்வா நடிக்கும் 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

சென்னை,

இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு 'நிறங்கள் மூன்று' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயப்பிரகாசின் மகன் தஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சின்னி ஜெயந்த் மற்றும் ஜான் விஜய் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். கடந்த ஜனவரி 2-ந்தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. ஒரே கட்டமாக படத்தின் படப்பிடிப்பை நடத்தி மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...