சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

நடிகர் கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். விருமன் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். 

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று விருமன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுனவம் தன்னுடைய சமூக வலைதளத்தில் விருமன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு