சினிமா செய்திகள்

முனீஷ்காந்த் நடிக்கும் 'திரைவி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

முனீஷ்காந்த் நடிக்கும் 'திரைவி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்.

தினத்தந்தி

முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன், வினோத் சாகர் ஆகியோரின் நடிப்பில் உருவான "திரைவி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிச்சைக்காரன் புகழ் இயக்குனர் சசி வெளியிட்டார்.

நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் பி. ராஜசேகரன் தயாரிப்பில், முருகானந்தம் இணை தயாரிப்பில்,கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கியிருக்கும் திரைவி படத்தை இயக்குனர் சசி தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டார்.

இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்தி தட்சணாமூர்த்தி, ''உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது கெட்டவர்களும் யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் "திரைவி" என்று கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்