சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இணைந்து பாடிய 'பனங்கருக்கா' பாடல் வைரல்

'சார்' படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் போஸ் வெங்கட் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த நிலையில் போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு முதலில் 'மா.பொ.சி' (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். பின்னர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் தலைப்பு 'சார்' என்று மாற்றப்பட்டது. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. சித்துகுமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு இனியன் ஜே ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்