சினிமா செய்திகள்

வடிவேலு நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

வடிவேலு நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 'அப்பத்தா' என்ற இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை