சினிமா செய்திகள்

நடிகையாக்கிய உணவு பழக்கம் - ஐஸ்வர்யா லட்சுமி ருசிகரம்

தினத்தந்தி

தமிழில் விஷாலின் ஆக்ஷன், தனுஷ் ஜோடியாக ஜெகமே தந்திரம், ஆர்யாவுடன் கேப்டன், விஷ்ணு விஷால் ஜோடியாக கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி அளித்துள்ள பேட்டியில், "என் உணவு பழக்கம்தான் என்னை சினிமாவிற்கு அழைத்து வந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? ஓட்டலுக்கு சென்று ருசிருசியாக சாப்பிடுவது என் வழக்கம். எம்.பி.பி.எஸ். கடைசி ஆண்டு பரீட்சை எழுதி முடித்து விட்டு ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றேன். அங்கு ஒரு படத்துக்கு நடிகர், நடிகை தேர்வு நடப்பதை அறிந்து ஒரு ஜாலிக்காக முயற்சி செய்தேன்.

எதிர்பாராமல் அந்த படத்தில் நடிக்க தேர்வானேன். அதுதான் எனது முதல் சினிமா அனுபவம். நடிகையானபின் எனது உணவு பழக்க வழக்கம், பிட்னஸ் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன். வார கடைசியில் மட்டும் பிடித்ததையெல்லாம் சாப்பிட்டேன். அதற்கு பதிலாக ஜிம்மில் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தேன்.

ஸ்லிம்மாக இருப்பது மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருந்து ஆக வேண்டும். அதற்காக பலவந்தமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நான்கு சுவற்றுக்குள் செய்வது பிடிக்காவிட்டால் வெளியே போய் ரன்னிங் செய்யலாம்'' என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்