சினிமா செய்திகள்

'லியோ' படத்தின் காட்சி இணையத்தில் லீக் - படக்குழு அதிர்ச்சி

காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணியில் ஏற்கனவே 'மாஸ்டர்' படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.இந்த படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசை. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கவுள்ளார். அதேபோல் நடிகர் விஜயுடன் திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட பெரிய பட்டாளமே நடிக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் 'லியோ' படத்தின் டைட்டில் புரோமோ காட்சி அண்மையில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த புரோமோவில் இடம்பெற்ற பாடல் பலரையும்   கவர்ந்தது.  

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் 'லியோ' படக்குழு காஷ்மீருக்கு சென்றது. காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் லியோ படத்தின் காட்சி இணைத்தில் லீக் ஆகியுள்ளது.இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது