தொடர்ந்து அர்ஜுனை வைத்து நிபுணன், மோகன்லாலை வைத்து பெருச்சாழி ஆகிய படங்களை டைரக்டு செய்தார். சீதக்காதி படத்தின் இணை தயாரிப்பையும் கவனித்தார். இதையடுத்து அவர் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஒரு படத்தை தயாரித்து டைரக்டு செய்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்கள் மிக குறைவு. அப்படியே எடுத்திருந்தாலும், அதில் காதல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் திணிக்கப்பட்டு இருக்கும்.
அன்புக்கொரு பஞ்சமில்லை என்பதே படத்தின் கரு. இதற்குள் நிறைய புதுமுகங்களை புகுத்த இருக்கிறோம். 4 குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.