சினிமா செய்திகள்

கர்ப்பிணியான தனது ரசிகைக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கிய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நிறைமாத கர்ப்பிணியான தனது ரசிகைக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தம்பதிகள் ராகவா விக்னேஷ் - ஜெகதீஸ்வரி. இவர்கள் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாவர். ஜெகதீஸ்வரி கர்ப்பமாக இருந்து உள்ளார். கர்ப்பமாக இருந்த மனைவியிடம், அவரது ஆசை குறித்து ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என ஜெகதீஸ்வரி கூறியுள்ளார். 4-வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்கு நேரம் கேட்க ராகவா விக்னேஷ் முயன்றுள்ளார்.

இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய படப்பிடிப்பு நடந்து வரும் தளத்துக்கு தம்பதியரை வரவழைத்து சந்தித்துள்ளார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரிக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது