சினிமா செய்திகள்

திருநங்கைகளுக்கு வீடு கட்ட லாரன்சுக்கு ரூ.1.5 கோடி கொடுத்த அக்‌ஷய்குமார்

இந்தியில் காஞ்சனா படத்தை ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் அக்‌ஷய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

காஞ்சனா, பாண்டி, ராஜாதி ராஜா, முனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் லாரன்ஸ் தற்போது இந்தியில் காஞ்சனா படத்தை லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் அக்ஷய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.

லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் நடத்தி அவர்களுக்கு மருத்துவம், கல்வி உதவிகள் வழங்கி வருகிறார். அடுத்து திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிட்டு உள்ளார். இதற்கான பூமி பூஜையை விரைவில் தொடங்க இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் லாரன்சின் அறக்கட்டளை அமைப்புக்கு நடிகர் அக்ஷய்குமார் ரூ.1.5 கோடி வழங்கி உள்ளார். இந்த தொகையையும் சேர்த்து திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை தொடங்கப்போவதாக லாரன்ஸ் அறிவித்து உள்ளார். லாரன்ஸ், காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து இருந்தார்.

இப்போது அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு