சினிமா செய்திகள்

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க மோகன்லால் மறுப்பு

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். ஆனால் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துவிட்டார்.