சினிமா செய்திகள்

ஆன்லைன் விளையாட்டின் விபரீதத்தை சொல்லும் படம் ‘கேம் ஆப் லோன்ஸ்'

இந்த படத்தில் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்து பிரபலமான அபிநய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஆன்லைன் விளையாட்டின் விபரீதத்தை சொல்லும் படைப்பாக, கேம் ஆப் லோன்ஸ்' என்ற புதிய படம் தயாராகி இருக்கிறது. நிவாஸ் ஆதித்தன் கதாநாயகனாக நடித்துள்ளார். எஸ்தர், ஆத்விக் ஆகியோரும் நடித்துள்ளனர். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து பிரபலமான அபிநய், பல ஆண்டுகளுக்கு பிறகு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் அபிஷேக் லெஸ்லி கூறும்போது, கொரோனா காலத்தில் ஆன்-லைன் கேமிங், ஆன்லைன் லோன் என பலர் சிக்கிக்கொள்வதை தினமும் கேள்விப்பட்டேன். இதைப்பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் ஏன் ஒரு படம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம்.

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, லோன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருவன், காலை முதல் மாலை வரை ஒரு நாளில் சந்திக்கும் பிரச்சினைகள் தான் 90 நிமிடங்கள் கொண்ட இந்தப்படம். ஜே.ஆர்.ஜே. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜீவானந்தம் தயாரித்துள்ளார். சபரியின் ஒளிப்பதிவிலும், ஜோ கோஸ்டா இசையிலும் உருவான இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. விருதுகளை குறிவைத்து அல்ல, விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த படம், என்றார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்