சினிமா செய்திகள்

போட்டி போடும் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி - வைரலாகும் போஸ்டர்

விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. தெலுங்கில் 'மட்டி குஸ்தி' என்ற பெயரில் வெளியாக உள்ளது.

'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் 'கட்டா குஸ்தி' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் போட்டி போடுவது போன்று இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...