வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளார். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாகிறது. இதர நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
அதிரடி சண்டை கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. மங்காத்தா, என்னை அறிந்தால், விவேகம் படங்களுக்கு பிறகு புதிய படத்திலும் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். முந்தைய படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்த அவர் புதிய படத்துக்காக தலைமுடியை கருப்பாக்கி இளமையாக மாறியுள்ளார்.