சென்னை,
‘நந்தன் 2’ எடுக்க தயாராக இருப்பதாக இயக்குநர் இரா.சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடுள்ள பதிவில், ‘முழுக்க முழுக்க ‘நந்தன்’ படம் குறித்த பேச்சுதான்… ‘நந்தன் 2’ எடுக்க மூவருமே தயார்… விரைவில் நற்செய்தி’ என்று தெரிவித்திருக்கிறார்.
'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். தொடர்ந்து 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 'அயோத்தி', 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.
சமீபத்தில் இரா.சரவணன் இயக்கத்தில் 'நந்தன்' திரைப்படத்தில் சசிகுமார் நடித்திருந்தார். ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் பலரது பாராட்டுகளை பெற்றது. தற்போது இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குநர் அப்டேட் கொடுத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.