சினிமா செய்திகள்

பிரம்மாண்ட படைப்பு... கேஜிஎப்-2 பார்த்து பிரமித்த ஷங்கர்

பிரம்மாண்ட படைப்பை கொடுத்ததற்காக பிரசாந்த் நீல்க்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நவீன முறையில் கதை, திரைக்கதை, படத்தொகுப்பை கொடுத்து மகிழ்வித்துள்ளதாக கேஜிஎஃப் 2 படக்குழுவை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். 

படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அதிரடி காட்சிகளில் வரும் வசனங்கள் ரசிக்க வைத்துள்ளதாகவும், யாஷ் மாஸாக நடித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். "பெரியப்பா" வசனம் வரும் காட்சியை குறிப்பிட்டு கூறியுள்ள ஷங்கர், பிரம்மாண்ட படைப்பை கொடுத்ததற்காக பிரசாந்த் நீல்க்கு நன்றி தெரிவித்துள்ளார். 

ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவு சகோதரர்களையும் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்