சென்னை,
சமீபத்தில் நடந்த அதர்ஸ் பட விழாவில் உடல் எடை குறித்த கேள்விக்கு கவுரி கிஷன் கடுமையாக பதிலளித்திருந்தார். இதற்கு பலரும் கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், பாடகி சின்மயி, இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் கவின் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சின்மயி வெளியிட்ட பதிவில், கவுரி அற்புதமாக பதில் கொடுத்தார். இளம் நடிகை ஒருவர் தனது நிலைப்பாட்டில் பின்வாங்காமல் நின்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எந்த நடிகரிடமும் அவரது எடை என்ன என்று கேட்பதில்லை. ஒரு நடிகையிடம் மட்டும் ஏன் கேட்டார்கள் என்று தெரியவில்லை இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக நடிகையும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான குஷ்பு நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.