சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'கள்வன்' பட டிரெய்லர் வெளியீடு

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கள்வன்'.

தினத்தந்தி

சென்னை,

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கள்வன்'. இந்த திரைப்படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளனர். இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டில்லி பாபு தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கள்வன்' படம் ஏப்ரல் 4-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு