சினிமா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஹன்சிகா

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா.

திருப்பதி,

நடிகை ஹன்சிகா, இன்று தனது தாயாருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஹன்சிகா

தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுக்கு ஜோடியாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, 2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது அவரது சினிமா பயணம் சரிவை சந்தித்திருந்தாலும், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

விவாகரத்து

கடந்த 2022-ம் ஆண்டு இவர், தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில காலத்திலேயே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

தரிசனம்

இந்த நிலையில், இன்று தனது தாயாருடன் திருப்பதிக்கு வருகை தந்த ஹன்சிகா, ஏழுமலையானை தரிசித்தார்.

கோவில் வளாகத்தில் அவரை கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். எளிமையான தோற்றத்தில் கோவிலுக்கு வந்திருந்த ஹன்சிகாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.