சினிமா செய்திகள்

பிறந்த‌நாள் வாழ்த்து: பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த‌ நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் குவிந்தனர். இதனால், அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

இதேபோன்று, முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றிகளை தெரிவித்து கொண்டார். தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்