சினிமா செய்திகள்

ஹாட்ரிக் வெற்றி- ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய மூன்று படங்களின் ஹாட்ரிக் வெற்றியை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் டியூட். இந்த படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் முன்னனி நடிகையான மமிதா பைஜு நடித்துள்ளார். காதல், காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் பரிதாபங்கள் ராகுல், நேகா ஷெட்டி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.

திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.இப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மூன்று படங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து