சினிமா செய்திகள்

நடிகையின் உடம்பில் உள்ள மச்சங்களை எண்ணி விட்டீர்களா..?மேடையில் நடிகரை அதிரவைத்த கேள்வி..!

படத்தின் கதாநாயகனிடம் கேட்ட அருவறுக்கத்தக்க கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்,

சுரேஷ் கொண்டேத்தி என்பவர் தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் படத்தயாரிப்பாளர் ஆவார். அவர் சந்தோஷம் என்ற வார இதழை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் அறுவறுக்கத்தக்க வகையில் கேட்ட கேள்வியால் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற டி ஜே டில்லு என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது படத்தின் கதாநாயகன் சித்து ஜொன்னாலகடாவிடம், படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல், நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு உள்ளீர்களா? என்று கேட்டு அதிர்ச்சியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தினார்.

இப்படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது? என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் சீன் இடம்பெற்றுள்ளது.

அதனை குறிப்பிட்டு பேசிய சுரேஷ், நடிகையின் உடம்பில் 16 மச்சங்கள் உள்ளன என்று படத்தில் கண்டுபிடித்துள்ளீர்கள். அதை போல நிஜ வாழ்க்கையிலும் அப்படி செய்தீர்களா? என்று நாயகன் சித்துவை நோக்கி கேட்டார். ஆனால், அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

இந்த வீடியோ இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பெண்களை மதிக்க தெரியாத சுரேஷ் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை நேஹா ஷெட்டியும் தன் எதிர்ப்புகளை பதிவிட்டுள்ளார். இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இதன்மூலம் சுரேஷின் பெண்களை மதிக்கும் முறை நன்றாகவே வெளிப்பட்டுள்ளது என்று அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், நான் எவ்வித இரட்டை அர்த்தத்திலும் அவ்வாறு கேட்கவில்லை என்று சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...