மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டரில், 2002 நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றி பெற்ற பின்பு, லார்ட்ஸ் மைதான பால்கனியில் நின்று தனது ஜெர்சியை கழற்றி சுழற்றி கொண்டாடிய கங்குலியின் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை ராஜ்குமார் ராவ் அப்படியே செய்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்ரமாதித்யா மோட்வானே இயக்கும் இந்த பயோபிக் திரைப்படத்தை லவ் ரஞ்சன் மற்றும் அங்குர் கார்க் தயாரிக்கின்றனர். இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.