சினிமா செய்திகள்

'இதனால்தான் துசாராவை தேர்ந்தெடுத்தோம்' - 'சீயான் 62' பட தயாரிப்பாளர்

சமீபத்தில் துசாரா விஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார்.

சமீபத்தில், ஒவ்வொன்றாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் துசாரா விஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தயாரிப்பாளர் ரியா ஷிபு துசாரா விஜயனை தேர்ந்தெடுத்தது குறித்து கூறுகையில்,

படத்தில் நடிப்பவர்களை தேர்ந்தெடுப்பது முழுக்கமுழுக்க டைரக்டர் அருண் குமார்தான். அவர் இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்து தெளிவாக இருக்கிறார். நாயகி, புத்துணர்ச்சியோடும் விக்ரமுக்கு புதிய ஜோடியாகவும் இருக்க வேண்டும் என்று டைரக்டர் விரும்பினார். இதற்கு துசாரா விஜயன் சரியாக இருப்பார் என்பதால் அவரை தேர்ந்தெடுத்தோம். என்றார்

முன்னதாக சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு