சினிமா செய்திகள்

விஜயகாந்த் திரையிலும், நிஜவாழ்விலும் ஹீரோதான் - நடிகர் சிம்பு புகழாரம்

மக்கள் மனதில் என்றும் வாழும் சகாப்தம் விஜயகாந்த் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நடிகர் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு எனது இதயம் உடைந்தது. அனைவரையும் ஒருவராக பார்க்கும் குணம் கொண்டவர் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த் திரையிலும், நிஜவாழ்விலும் ஹீரோதான். விஜயகாந்தை நான் ஒரு சகோதரராகப் பார்த்தேன். மக்கள் மனதில் என்றும் வாழும் சகாப்தம் விஜயகாந்த். " என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை