சினிமா செய்திகள்

மலையாள சினிமாவில் அதிக வசூல்: சாதனை படைத்த "லோகா" திரைப்படம்

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான "லோகா" மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா ' படம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் வசூலை முறியடித்துள்ளது. ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

இந்த நிலையில், "லோகா சாப்டர் 1" திரைப்படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அதாவது, இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் எம்புரான் படமும் , மஞ்சுமல் பாய்ஸ் படமும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி