சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'வீரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் 'வீரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஹிப் ஹாப் ஆதி தற்போது 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் 'வீரன்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

பேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 'சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படம் வருகிற ஜுன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...