சென்னை,
ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 20-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், ஹிப்ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்' திரைப்படம் வெளியாக உள்ளது.
View this post on Instagram