சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு முன்னாள் மனைவி ரூ.8 கோடி நஷ்டஈடு

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு முன்னாள் மனைவி ரூ.8 கோடி நஷ்டஈடாக வழங்கினார்.

தினத்தந்தி

'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' ஹாலிவுட் படங்களில் 'ஜாக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜானி டெப். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில், 50 வயதில் தன்னைவிட 25 வயது குறைவான அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து 2015-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஒன்றரை வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த நிலையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்து இருந்தார். இது பரபரப்பானது. இதனால் ஜானி டெப் படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஆம்பர் ஹேர்ட்டுக்கு எதிராக ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 3 ஆண்டுகள் நடந்த விசாரணையில் ஜானி டெப்புக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பு வந்தது. ஜானி டெப் மீது அவதூறு பொய் குற்றச்சாட்டுகளை கூறியதற்காக ஆம்பர் ஹேர்ட் நஷ்டஈடாக ரூ.78 கோடியும், அபராதமாக ரூ.38 கோடியும், மொத்தம் ரூ.116 கோடி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தன்னால் ரூ.116 கோடி வழங்க முடியாது என்றும், ரூ.8. கோடி வழங்கி வழக்கை முடித்துக் கொள்வதாகவும் ஆம்பர் ஹேர்ட் தெரிவித்து உள்ளார். இதனை ஜானி டெப் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை