கலிபோர்னியா பகுதியில் வசித்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமானது. பழத்தோட்டங்களுடன் கட்டி இருந்த சொகுசு வீடுகளும் காட்டுத்தீக்கு தப்பவில்லை.
நூற்றுக்கணக்கான சொகுசு கார்களும் எரிந்து உருக்குலைந்தன. இந்த காட்டுத்தீயில் 42 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் லேடி காகா, கிம் கார்தாஷியான், கன்யெ வெஸ்ட் ஆகியோரின் வீடுகள் எரிந்துள்ளன.