சினிமா செய்திகள்

அது எப்படி வெளியிடலாம்...! நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

தினத்தந்தி

மதுரை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிலையில் வாரிசு, துணிவு பட நள்ளிரவு சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அனுமதியின்றி வெளியிட்ட புகாரில் மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதித்த நேரத்தை தவிர்த்து 11ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணிக்கு படங்களை திரையிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்