சினிமா செய்திகள்

'இட்லி கடை' படம் எப்படி இருக்கு..? சீமான் கொடுத்த ரிவ்யூ

இட்லி கடை திரைப்படத்தை பார்த்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி பேசியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இட்லி கடை திரைப்படத்தை பார்த்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி பேசியுள்ளார். அதாவது, "கன்றுக்குட்டியை வைத்து கவிதைத்தனமான முடிவு, இப்படி ஒரு வாழ்வியலை பதிவு செய்தது பாராட்டுக்குரியது. நேர்த்தியான திரைக்கதை நகர்வை உணர முடிந்தது. மன நிறைவோடு 'இட்லி கடை' படத்தை பார்த்து ரசித்தேன். ஒவ்வொரு காட்சிகள் நகரும்போது மகிழ்ந்து நெகிழ்ந்தேன். தம்பி தனுஷுக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து