சினிமா செய்திகள்

'முத்த காட்சியில் நடித்தால் கணவருக்கு பிடிக்காது' - நடிகை பிரியாமணி

தினத்தந்தி

தமிழில் பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கிறார். நாகசைதன்யா கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த கஸ்டடி படத்திலும் பிரியாமணி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த நிலையில் முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், "சில ஆண்டுகளாகவே நான் முத்த காட்சிகளில் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என முடிவு செய்து கொண்டேன். அது ஒரு கதாபாத்திரம்தான் என்ற போதிலும் ஒரு பெண்ணாக அதனால் மிகவும் கஷ்டப்படுவேன். முத்த காட்சிகளில் நடிப்பதை கணவரும் விரும்ப மாட்டார் அப்படி நடித்தால் கணவருக்கு பதில் சொல்ல வேண்டி வரும். எனக்கு திருமணமான 2017-க்கு பிறகு முத்த காட்சிகளில் நடிக்கவில்லை. நடிக்க ஒப்பந்தமாகும் முன்பே இதுகுறித்து சொல்லி விடுவேன். நான் நடிக்கும் படங்களை என் இரு வீட்டு குடும்பத்தினரும் பார்ப்பார்கள் முத்த காட்சிகளில் நடித்து அவர்கள் மனதை கஷ்டப்படுத்துவதில் எனக்கு இஷ்டமில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுத்தேன்'' என்றார்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி