ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தின் மூலமாக அறிமுகமாகி, கண் சிமிட்டி இந்திய ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் பிரியா வாரியர். மலையாளம் தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், குட் பேட் அக்லி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பிரியாவுக்கு கேரளா திருச்சூர் சொந்த ஊராகும். இவர் மோகினியாட்ட கலைஞராவார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா வாரியரிடம், வருங்காலத்தில் எந்த நடிகை உங்களுக்கு போட்டியாக வருவார்? என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கும்போது, எப்போதுமே பில்டப்பையும், தேவையற்ற கர்வத்தையும் நான் விரும்புவதே கிடையாது. எனவே நான் யாருக்கும் போட்டி கிடையாது. திறமைசாலிகள் அத்தனை பேரும் உயரும் களம் இது. இதில் போட்டி என்ற வார்த்தையே வேண்டாமே... என்று கூறி சென்றார்.
குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸுடன் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியர் நடனம் ஆடியது ரசிகர்கள் மட்டுமில்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்றது.
View this post on Instagram