சினிமா செய்திகள்

'ரொம்ப நாளைக்கு வில்லனாகவே இருக்க முடியாது' - எஸ்.ஜே. சூர்யா

சமீபத்தில் வெளியான விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார்.

தினத்தந்தி

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. 'சூர்யாவின் சனிக்கிழமை', கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், சமீபத்தில் வெளியான விக்ரமின் வீரதீர சூரன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார்.

தற்போது இவர் பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', கார்த்தியுடன் 'சர்தார் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், 'கில்லர்' என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 

'நான் நடிகனாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் காலம் வந்துவிட்டது. ரொம்ப நாளைக்கு வில்லனாகவே சுத்திக்கொண்டு இருக்க முடியாது. அதற்காக நான் வரவில்லை. 'கில்லர்' என்கிற படத்தை இயக்கி நடிக்க போகிறேன். என்னுடைய இயக்கத்தை பார்க்க ஆசைப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக அது பிடிக்கும்' என்றார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்