சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்தேன் -நடிகை முமைத்கான்

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகை முமைத்கான் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்ததாக தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே, விக்ரமின் 'கந்தசாமி' படத்தில் என் பேரு மீனா குமாரி, விஜய் நடித்த 'போக்கிரி' யில் என் செல்லப்பேரு ஆப்பிள் போன்ற பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் முமைத்கான். தமிழ் ,தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வந்த முமைத்கான் சமீபகாலமாக சினிமாவில் நடிக்கவில்லை.

இதற்கிடையே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் முமைத்கான் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்ததாக தெரிவித்துள்ளார்.

அதாவது, "எனக்கு சமீபத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு நான் குணமடைந்து விட்டேன். கடந்த காலத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்தேன். தற்போது அவர்கள் யாருடனும் நான் தொடர்பு இல்லை அவர்களை விட்டு பிரிந்து விட்டேன். இப்போது தனியாக ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எதிர்காலத்தில் திருமண வாய்ப்பு வந்தால் திருமணம் செய்து கொள்வேன்." என்று கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து