சென்னை,
ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா. மேலும் இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது புதிய படமான கிருஷ்ண லீலாவின் புரமோஷனின்போது, அவர் கவர்ச்சி மற்றும் நெருக்கமான கதாபாத்திரங்களை தவிர்த்ததால் தான் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்று கூறினார்.
அவர் கூறுகையில், "ஆரம்ப நாட்களில், நான் என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து வருத்தப்படுவேன். எனக்கு அதிக கவர்ச்சியான வேடங்கள் வழங்கப்பட்டன, ஆனால் நான் அவற்றை நிராகரித்தேன். மேலும், மிகுந்த நெருக்கம் கொண்ட காட்சிகள் உள்ள கதாபாத்திரங்களையும் நான் மறுத்துவிட்டேன். அதனால் சில வாய்ப்புகளை நான் இழந்தேன். இதனால் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
மேலும், முதலில், நான் பல சிறிய வேடங்களில் நடித்தேன், பின்னர் கதாநாயகி வேடங்கள் வழங்கப்பட்டன. இதுவே எனது வெற்றி என்று நான் உணர்கிறேன்' என்றார்.
View this post on Instagram