பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும், மாடல் அழகியுமான யாமி கவுதம் டஸ்வி', லாஸ்ட்', ஓ.எம்.ஜி.-2', பூட் போலீஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆர்டிகல் 370', தி தேர்ஸ்டே' போன்ற படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.
தேசிய-மாநில மற்றும் தனியார் விருதுகளுக்கு கூட பலமுறை இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், இதுவரை இவர் எந்த விருதையும் பெற்றது கிடையாது.
இதுகுறித்து அவர் கூறும்போது, விருதுகள் எனக்கு கிடைக்காமல் போனதில் வருத்தம் இல்லை. வாழ்க்கை ஒருவருக்கு அளிக்கும் வெகுமதி வெறும் விருதுகள் மட்டும் கிடையாது. எனவே அந்த வகையான அங்கீகாரத்தை தேடுவதை நிறுத்தி விட்டேன். விருது கிடைத்தால்தான் நல்ல நடிகையா... ரசிகர்கள் என்னை நேசிக்கிறார்கள். திரையுலகினர் எனக்கு படவாய்ப்புகளைத் தருகிறார்கள். இதைவிட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. விருது எனக்கு ஒரு விஷயமே அல்ல'', என்றார்.